2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் நினைப்பது நடக்கும். யாரை தொடர்பு கொள்ள நினைக்கிறீர்களோ, அவர்களை தைரியமாக தொடர்பு கொள்ளுங்கள். உங்களின் தைரியம், தன்னம்பிக்கை இந்த வாரம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல், அதற்கு தகுந்த லாபம் இருக்கிறது. ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், கம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கும் வருமானம் உண்டு. கல்வி சிறப்பாக உள்ளது. வேலையை பொறுத்தவரை எந்த துறையில் பயணிப்பவராக இருந்தாலும் திருப்தி இல்லாத மனநிலையில்தான் இருப்பீர்கள். அப்படியிருந்தால் அந்த மனநிலையை மாற்றுங்கள். சொந்த தொழில் பரவாயில்லை. மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள் இருக்கின்றன. வாரம் முழுவதும் முருகனை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். பெருமாளையும் சேவியுங்கள் நல்லது நடக்கும்.
