2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அதிகம் இருக்கும். வேலையை பொறுத்தவரை திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். உங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு வெளியே வர வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் போன்ற காலகட்டங்கள் இந்த வாரத்தில் இருக்கின்றன. அதனால் வேலையில் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கலைத்துறையில் இருப்பவர்கள் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னரும், நீங்களும் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். மணவாழ்க்கையில் கணவன் - மனைவி உறவு சுமாராகத்தான் உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவு உள்ளது. உயர்கல்வி நன்றாக இருக்கும். நோய்கள் குறையும். கடன் குறைவதற்கான வாய்ப்பு, சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் உருவாகும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயல்பாட்டுக்கு வரும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முருகன் மற்றும் சிவனை வழிபாடு செய்தால் ஏற்றம் பெறலாம்.
