2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த வாரம் போலவே டூர், டிராவல், பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன. பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. வேலையில் எதிர்பாராதவிதமாக விடுப்பு எடுக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருந்தால்கூட உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களுடைய பணம் அல்லது பொருள் முடங்கிக் கொள்ளும் அல்லது மொத்தமாக மாட்டிக்கொள்ளும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அது திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. புதிய காதல் மலரும். அந்த காதல் வெற்றியடைவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஷேர், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இருக்கும் பணத்தை ரொட்டேஷன் செய்யுங்கள். விட்டதை பிடிக்க ஆசைப்படாதீர்கள். கிரக நிலைகள் சரியில்லை. இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்கள் முயற்சி செய்யலாம். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இந்த வாரம் முருகனை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக சிவ தரிசனம் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.
