2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு, இறையருளால் குழந்தை பாக்கியம் உண்டு. வேலையில் கவனமாக இருங்கள். காரணம், எந்த துறையில் இருந்தாலும் நீங்கள் பார்க்கும் வேலையை விட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். இந்த வாரம் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சுமாராகவே உள்ளது. அதனால் பெரிய முதலீடு வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. வருமானங்கள் சுமார். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. நம் கண்முன்னே பணம், பொருள் பறிபோகும்படியான காலகட்டங்கள் இந்த வாரம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. ஆனால், வருமானங்கள் சுமார். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். நண்பர்களால் நற்பலன்கள், மூத்த சகோதர, சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் உள்ளன. திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் உங்களுக்கு வர வேண்டிய பணங்கள் முடங்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனி பகவானை தரிசனம் செய்து வாருங்கள்.
