2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டு. சமூக செயல்பாடுகள் அதிகரிக்கும். அதனால் சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படுவது போன்ற ஒரு தோற்றம், ஆனால், அதில் நிறைய தடைகள் இருக்கின்றன. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். எல்லாமே லாபம் வருவது போன்ற தோற்றத்தை தந்தாலும், லாபம் இல்லை. கிரக அமைப்புபடி, உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்கள் பணம் மொத்தமாக முடங்கிக்கொள்ள வேண்டிய காலம். அதனால் கவனமாக இருங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. யாரிடமாவது கடன் கேட்டிருந்தால், கடன் கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கின்றன. உடல் ஆரோக்கியத்திலும் பெரிய அளவில் கவனம் செலுத்துங்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். அதை மாற்றிக்கொண்டு செய்யும் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரையில் கணவன் - மனைவி இருவரில் யாரவது ஒருவருக்கு தேவையில்லாத விரயம், நஷ்டம், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் பெருமாள் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்யுங்கள்.
