2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை, கையில் பணம், தனம் இருந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கு கடன் கொடுத்தாலும் அது திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு வகையில் வெற்றியடையும். எதிர்பார்த்த செய்திகள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக வரும். இளைய சகோதர - சகோதரிகளால் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. நெருங்கிய உறவுகளால், எதிர்பாராத பயணங்களால் நற்பலன்கள் உண்டு. ஆணி மாதமாக இருந்தாலும் நீண்ட நாட்களாக வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது, வருமானங்கள் சுமார். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், கேடயங்கள் மட்டுமின்றி அரசின் அங்கீகாரமும் கிடைக்கும். சொந்த தொழில் நன்றாக உள்ளது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கும் பரவாயில்லை. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அதுவும் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு, அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த வாரம் முழுவதும் பெருமாள் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள்.
