✕
2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வார ஆரம்பத்தில் தாய் தந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். வருமானம் அனைத்தும் விரையமாகும். 19-ஆம் தேதி வரை வீட்டில் பிரச்சினைகள், அழுத்தங்கள் நிறைய இருக்கும். பூஜை செய்து வழிபாடு செய்தால் சங்கடங்கள் குறையும். தன்வந்திரிக்கு உலர் பழங்கள் இட்டு விளக்கேற்றுவதால் தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் தோன்றும். வேலையில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிரச்சினையிலிருந்து மீள்வதற்கான சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும்.

ராணி
Next Story