2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

ராகு கேது பெயர்ச்சியை பொறுத்தவரையில், இதுவரை 5 மற்றும் 11 ஆம் இடத்தில் அமர்ந்து இருந்த ராகு, கேது இருவரும், தற்போது 10 மற்றும் 4 ஆம் இடத்தில் அமரப்போகின்றனர். இதனால்நன்மைகள், தீமைகள் இரண்டும் சரிசமமாக நடைபெறப்போகிறது. எல்லாவிதமான முதலீடுகளும் கை கை கொடுக்கும் அதே வேளையில், அடுத்த ஒன்றரை வருடத்திற்கு மாமியாருடன் கருது வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உடல்நல பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். இறைவழிபாடு அவசியம். இந்த வார ராசியை பொறுத்தவரை, 3, 5 ஆகிய இடங்களில் கோச்சார சந்திரன் பயணம் செய்வதால், 10.11,12 ஆகிய தேதிகள் சற்று சாதகமான பதில்களையும், அதன்பிறகு வரக்கூடிய காலங்கள் மத்திமமான பலன்களையும் தரும். கவனமுடன் செயல்பட்டால் நற்பலன்கள் ஏற்படலாம்.

Updated On 10 Oct 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story