2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கிறது. சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் நன்றாக உள்ளது. தள்ளிப்போன திருமணம் நடைபெறும். பொருளாதார பிரச்சினைகள் ஏதும் இல்லை. உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் மிகப்பெரிய ஏற்றம், முன்னேற்றம் உள்ளது. தேடுதல் என்பது உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். வேலையில் முன்னேற்றங்கள் உண்டு. நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். அவர்களால் நற்பலன்கள் உண்டு. மூத்த சகோதர - சகோதரிகள் இருந்தாலும் அவர்களாலும் நன்மைகள் ஏற்படும். விநாயகர் மற்றும் கருடாழ்வாருடைய வழிபாடு சிறந்தது.
