2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
புதிய சொத்துக்கள், வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக நீங்கள் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றியடையும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். எதிர்பாராத பயணங்கள், அந்த பயணத்தால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பியவர்கள் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதவி செய்வார்கள். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். அலுவலகம் மாற முயற்சி செய்பவர்கள் செய்யலாம். உங்கள் கௌரவம், புகழ், அந்தஸ்து, காப்பாற்றப்படும். நண்பர்களால் மகிழ்ச்சி சந்தோசம், மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை இவை அனைத்தும் ஏற்படும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், குறிப்பாக டிஜிட்டல் கரன்சி போன்ற அனைத்திலும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். ஓரளவிற்கு நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். திருமணம் தள்ளி போனவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடைபெறும். இரண்டாவது திருமணமும் கைக்கூடும். ஒன்றிற்கு மேற்பட்ட தொழில்கள் தொடங்க வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு நன்றாக இருப்பதால் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள். இருப்பினும் இந்த வாரம் முழுவதும் தெய்வ அனுகூலம் அவசியம் என்பதால் விநாயகர் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபட்டு வந்தால் நன்மை ஏற்படும்.
