2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரத்தில் தேவையில்லாத பயணங்கள் வேண்டாம். நீண்ட நாட்களாக நகை, விலை உயர்ந்த ஆடைகள் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் சுமாராகத்தான் இருக்கும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள் உண்டு. அதிலும் இளைய சகோதர - சகோதரிகளால் நிம்மதியற்ற சூழல்கள் இருக்கின்றன. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்காது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. உங்களின் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. வேலையை பொறுத்தவரை சிறப்பாக உள்ளது. வேலையில் எதிர்பார்த்த அனைத்தும் அமையும். வேலையில் மாறுதல் எதிர்பார்ப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத நட்பு வட்டாரத்தால் நன்மை ஏற்படும். எங்கெல்லாம் சிவாலயங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் சிவ தரிசனம் மற்றும் விநாயகரை வழிபாடு செய்தால் இந்த வாரம் ஏற்றம் கிடைக்கும்.
