2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வீடு, இடம் வாங்க நினைப்பவர்கள் பொருளாதாரம் நன்றாக இருந்தால் வாங்குங்கள். கடன் வாங்கி வாங்காதீர்கள். பின்னால் பெரிய அளவில் வட்டி கட்ட வேண்டிய காலங்கள் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் அடக்கி வாசியுங்கள். கையில் பணம், தனம் இருக்கும். ஆனால், அதற்கேற்ற செலவினங்கள், விரயங்கள் இந்த வாரம் உண்டு. சொந்த தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத்தொழிலில் இருவரும் பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மணவாழ்க்கையிலும் கணவன் - மனைவி பிரிவு, வைத்தியச் செலவுகள் இருந்துகொண்டு இருக்கிறது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்தாலும் சுமாராகத்தான் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, வருமானங்கள் இருக்கிறது. அரசியல் வாழ்க்கை உங்களுக்கு ஏற்றம், முன்னேற்றத்தை தரும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏதாவது ஒரு வேலை, வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. கடன் கேட்டிருந்தால் கிடைக்கும். அதற்காக கடன் வாங்காதீர்கள் நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய நேரடியான, மறைமுகமான எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். இந்த வாரம் முழுவதும், சனி பகவானையும், சிவ தலத்தில் இருக்கக்கூடிய நந்தியம் பெருமானையும் வழிபாடு செய்யுங்கள். மாற்றம், முன்னேற்றம் அமையும்.

Updated On 23 July 2024 4:04 AM GMT
ராணி

ராணி

Next Story