2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நிரந்தரமான சொத்துக்களை வாங்குவீர்கள். காலி மனைகள், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதில் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த நல்ல விற்பனை, லாபம் இருக்கிறது. அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். உங்களின் கௌரவம், அந்தஸ்து பெரிய அளவில் உயரும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைக்கும். தொழில் நிறுவனம் தொடங்க வேண்டும், தொழில்முனைவோராக வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. பணி உயர்வு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வேலையில் மாற்றங்கள் உண்டு. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் சிவ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.
