2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இயற்கையாகவே நல்ல தெய்வ அனுகூலம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத தெய்வ தரிசனம் மற்றும் ஆலய தரிசனம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லையே என்று கவலைப்பட்டு, சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்காதவர்களுக்கு, இந்த வாரம் குழந்தைப் பேறுக்கான வாய்ப்பு, அவர்கள் மூலம் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் என அனைத்தும் கிடைக்கும். உங்கள் அந்தஸ்து, புகழ், கௌரவம் ஆகியவை கூடும். நீண்ட நாட்களாக இடம், வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் உண்டாகும். பெரிய அளவில் தொழில் தொடங்க வேண்டும், தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. இதுவரை திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நடக்கும். இல்லையென்றால், அது சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும். உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். யாரெல்லாம் பெரிய அளவில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறீர்களோ, உங்கள் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் மற்றும் வருமானம் கூடும். இந்த வாரத்தில் நீங்கள் முருகப்பெருமானையும், குறிப்பாக சிவன் கோவிலில் இருக்கக்கூடிய பிரம்மாவையும் தவறாமல் தரிசனம் செய்யுங்கள்.
