2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முதலீடு செய்ய வாய்ப்பிருந்தால் தாராளமாகச் செய்யலாம். முதலீடு செய்ய வாய்ப்பில்லாதவர்கள் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் அம்மாவுக்கு அதிகமாகச் செலவு செய்யுங்கள், அது தேவையற்ற செலவுகளைக் குறைக்க உதவும். இந்த வாரம் உங்களுக்கு வருமானம் இருந்தாலும், செலவுகள் பல மடங்கு அதிகமாக இருக்கும். பெரிய முயற்சிகளில் ஈடுபடுவது இந்த வாரத்திற்கு உகந்ததல்ல; உங்கள் அன்றாட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இடம் மாற அல்லது ஊர் மாற நினைத்தவர்களுக்கு அந்த வாய்ப்புகள் உண்டு. இளைய சகோதர சகோதரிகளுக்காக செலவு செய்வீர்கள். நெருங்கிய உறவுகளில் இருந்து பிரிந்திருக்கும் காலகட்டம் இது. இந்த வாரம் சொத்துக்கள் வாங்க நல்ல வாய்ப்புள்ளது. கலைத்துறையில் உள்ளவர்களுக்குப் புகழும் அந்தஸ்தும் கிடைக்கும், வருமானம் சுமாராக இருக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கும் இதே நிலைதான். சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல லாபமும் வருமானமும் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் சேர்ந்து தொழில் செய்பவர்களுக்கும் இது சிறப்பாக இருக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கும், திருமணம் மறுக்கப்பட்டவர்களுக்கும் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது திருமணம் செய்ய முயற்சிப்பவர்கள் சற்று காத்திருக்கவும், அதற்கான வாய்ப்புகள் குறைவு. பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு இந்த வாரம் பாஸ்போர்ட் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டுத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். முடிந்தால் முதலீடு செய்யுங்கள், அது நல்லது. இந்த வாரம் சிவன் கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுங்கள். குறிப்பாக துர்கையை தரிசனம் செய்து வருவது நல்லது.

Updated On 27 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story