2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள். மேலும், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவுகளால் மகிழ்ச்சியும், இளைய சகோதர, சகோதரிகளால் நன்மையும் உண்டு. குடும்பத்தில் புதிய வரவுக்கான வாய்ப்பும், எதிர்பாராத பயணங்களும் இந்த காலகட்டத்தில் உருவாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வீடு மாற்றம், இட மாற்றங்கள் நிகழக்கூடும்; சொத்து விற்பனை தடைபட்டிருந்தால், இப்போது நல்லபடியாக நடக்கும். சிறு மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கும், கமிஷன் ஏஜென்சி, தரகு, ஒப்பந்தம், ஆலோசனைத் தொழில் செய்பவர்களுக்கும் லாபம் கிடைக்கும். டிஜிட்டல், மீடியா, மார்க்கெட்டிங் மற்றும் கட்டுமானத் துறையினருக்கு ஏற்றமும், முன்னேற்றமும் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் அந்தஸ்தும், புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், பிரபல்யம் அடையவும் வாய்ப்புகள் உள்ளன. பங்கு வர்த்தகம் மூலம் வருமானம் கிடைக்கும். யூக வணிகங்கள் லாபத்தை அள்ளித்தரும் வாரமாக இது அமையும். உயர் கல்விக்கு ஏற்ற வாரமாகும். இந்த வாரம் சிவபெருமானையும், துர்கையையும் வழிபடுங்கள்.
