2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உயர்கல்வி பயில நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. தந்தையின் அன்பு, ஆதரவு கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் நன்மைகள் உண்டாகும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். தொழில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் வட்டம் விரிவடையும். குறிப்பாக பெண் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பயணங்கள் இருக்கும். தேடுதல் அதிகமாக இருக்கும். எவ்வளவு தேடுகிறீர்களோ அவ்வளவு வெற்றி கிடைக்கும். உறவுகளால் நற்பலன்கள் உண்டாகும். வீடு, இடம் மாற்றம் ஏற்படலாம். வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஊக்கத்தொகை என எதிர்பார்த்தவை கிடைக்கும். கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அது உங்கள் காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள், நிச்சயதார்த்தம் நடக்கலாம். தொழிலில் லாபம், காதல் விஷயங்கள் என அனைத்தும் இந்த வாரம் உங்களுக்கு உண்டு. வெளிநாட்டு தொடர்புகள் பரவாயில்லை. இரண்டாம் திருமணம் முயற்சிப்பவர்களுக்கு அமையும். இந்த வாரம் முழுவதும், சிவ பெருமானையும், மகாலட்சுமியையும் வழிபடுவது நல்லது.
