2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசிநாதன் புதன் நல்ல இடத்தில் இருப்பதால், எதிர்பாராத இறை அருள் கிடைக்கும். பண வரவு பரவாயில்லை. நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் இலக்கு என்ன என்பதை திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அதற்கான தைரியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்களைச் சாதிக்கத் தேவையான நபர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். உறவுகளால் ஒரு பக்கம் நன்மையும், மறுபக்கம் தேவையற்ற மன வருத்தங்களும் ஏற்படலாம். பயணங்கள் அதிகமாக இருக்கும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். மாத சம்பளம் வாங்குபவர்களுக்கும், உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கும் பரவாயில்லை. அரசு அல்லது தனியார் துறையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள பாக்கிகள் அல்லது போனஸ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழிலில் உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். உங்கள் நோக்கங்கள் பூர்த்தியாகும். தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு எழுதியிருந்தால் சாதகமான முடிவு எதிர்பார்க்கலாம். எதிரிகளை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முழுவதும், சனி பகவானையும், பைரவரையும் வழிபடுங்கள்.

Updated On 24 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story