2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பணப் புழக்கம் நன்றாகவே இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஓரளவு வெற்றியடையும். தேவையற்ற மனக் குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனையுடன் முடிவெடுப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார். நீண்ட நாட்களாக விற்காத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், புதிய வரவும் ஏற்படலாம். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். தொழில் பரவாயில்லை. ஆனால், லாபம் சுமாராகவே இருக்கும். உயர் கல்விக்கு முயற்சிக்கலாம். பாஸ்போர்ட், விசா போன்ற தடங்கல்கள் நீங்கி இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு சில தடங்கல்கள் ஏற்படலாம். அந்தஸ்து மற்றும் புகழ் கூடும். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல வாரம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் இருந்தாலும், வருமானம் குறைவாக இருக்கலாம். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மகாலட்சுமி மற்றும் சிவபெருமானின் அம்பாளை வழிபடவும்.
