2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதவுவார்கள். செவ்வாயும் கேதுவும் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால், துணிச்சலான முடிவுகளை எடுங்கள், வாழ்வில் ஏற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் சாதகமாக வரும். எதிர்பாராத பயணம் மற்றும் அதன் மூலம் மாற்றம் உண்டாகும். படிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. வேலை மற்றும் தொழில் நன்றாக இருக்கும், கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு ஆகியவை இருக்கும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் அல்லது பேச்சுவார்த்தைகள் உண்டாகும். தொழில்மாற்றம் செய்ய விரும்புபவர்கள், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் தாராளமாக முயற்சி செய்யலாம். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் விருப்பங்களும் ஆசைகளும் இந்த வாரம் நிறைவேறும். கலைத்துறையில் புகழ் கிடைக்கும். பங்குச்சந்தை, டிரேடிங், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களுக்கு சாதாரண முதலீட்டிலேயே லாபம் கிடைக்கும். இந்த வாரம், மகாலட்சுமியையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

Updated On 17 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story