2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இறை அருள் கிடைக்கும். பேச்சின் மூலம் வருமானம் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஆனால் பெண்களால் (அம்மா, மனைவி, சகோதரிகள்) தேவையற்ற செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகள் வேண்டாம். அவசரம், அவசியம் இருந்தால் மட்டுமே பயணம் செய்யுங்கள், இல்லையேல் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உறவுகளை விட்டுப்பிரிய வேண்டிய சூழ்நிலைகள் அல்லது உறவுகளால் மனவருத்தங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக விற்பனை ஆகாத சொத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். சிறு தொழில், சுய தொழில் அல்லது ஆன்லைன் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் பரவாயில்லை. பாஸ்போர்ட், விசா அப்ளை செய்தவர்களுக்கு அவை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகம். வெளிநாடு சென்று படிக்க நினைப்பவர்களுக்கும் அதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வேலையில் கவனம் செலுத்துங்கள். வேலையில் மாற்றம், இடமாற்றம் அல்லது ரோல் சேஞ்ச் எதிர்பார்த்தவர்களுக்கு அவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவசரம், அவசியம் இருந்தால் கூட கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்பவர்களுக்கும், ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரம் செய்பவர்களுக்கும் அவுட்ஸ்டாண்டிங் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நட்பு வட்டாரத்தைப் பராமரிப்பது முக்கியம். நல்ல நண்பர்களைப் பிரிய நேரிடலாம். மகாலட்சுமியையும் பெண் தெய்வங்களையும் வழிபடுங்கள்.

Updated On 15 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story