2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் ராசியில் சுக்கிரனும் குருவும் இருப்பதால் இயற்கையாகவே தெய்வ அனுகூலம் உண்டாகும். பேச்சை தொழிலாகக் கொண்டவர்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும், பணப்புழக்கம் சீராக இருக்கும். கையில் பணமும், வங்கி இருப்பும் நல்ல நிலையில் இருக்கும். மூன்றாம் இடத்தில் கேது இருப்பதால் தேவையற்ற சிந்தனைகள், குழப்பங்களைத் தவிர்க்கவும். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத புனித யாத்திரைகள் இந்த வாரம் அமையும். சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. கல்வி சிறப்பாக இருக்கும்; உயர்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இரண்டிலும் சிறந்து விளங்குவீர்கள். வியாபாரம் சாதாரணமாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் அல்லது இடங்களில் தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். மறுமணம் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வாரம் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பாஸ்போர்ட் தாமதமாகி இருந்தால், இந்த வாரம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். ஆராய்ச்சி அல்லது பி.எச்.டி. செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. தேர்வில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். ஆனால் வருமானம் சுமார். வேலையில் திருப்தியின்மை, போராட்டங்கள் இருக்கலாம். விநாயகரையும், நரசிம்மரையும் வழிபடுவது அவசியம்.
