2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வருமானம் நன்றாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். பேச்சால் வருமானம் ஈட்டுபவர்களுக்கு நல்ல சம்பாத்தியம் உண்டு. எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு, ஆனால் நீங்கள் தைரியமாக செயல்பட வேண்டும். அதிகம் யோசித்தால் செயல்பட முடியாது. முயற்சி ஸ்தானத்தில் கேது இருப்பதால், உங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். தூக்கத்தை தியாகம் செய்யாதீர்கள், தேவையற்ற மனக்குழப்பங்களை தவிர்த்து தைரியமாக செயல்படுங்கள். உறவுகளால் நன்மையும், தேவையற்ற பிரச்சனைகளும் கலந்திருக்கும். நிரந்தர சொத்துக்கள் வாங்குவதற்கும், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு விற்பனை மற்றும் வருமானம் உண்டு. விவசாயத்தில் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புகழும் அந்தஸ்தும் கிடைக்கும், ஆனால் பணவரவு குறைவாக இருக்கும். பங்குச்சந்தை, லாட்டரி, ரேஸ், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள், லாபம் குறைய வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இரண்டாம் திருமணம் முயற்சித்தவர்களுக்கு நன்மைகள் நடக்கும். முருகப்பெருமானையும் நரசிம்மரையும் வழிபடுவது நல்லது.

Updated On 5 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story