2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசியில் குரு இருப்பதால் தெய்வ அனுகூலம் உண்டு. எதிர்பாராத ஆலய தரிசனங்கள் கிடைக்கும். இந்த மாதம் புரட்டாசி ஆக இருந்தாலும் குடும்பத்தில் சுப காரியங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிகிச்சைகள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வேலைவாய்ப்பை பொறுத்தவரை அது நன்றாகவே இருந்தாலும் சிறிது திருப்தியின்மை இருக்கலாம், எனவே வேலையில் கவனம் செலுத்துவது முக்கியம். சொந்தத் தொழில் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு இயல்பாக இருக்கும். இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. பாஸ்போர்ட் அல்லது விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் அசையாச் சொத்துக்கள், நிலம் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் சாதாரண முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் நீங்கள் துர்க்கையையும், பைரவரையும் வழிபடுவது நல்லது.

Updated On 16 Sept 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story