2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் நீங்கள் நிலம், வாகனம் போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் அதிகம். விவசாயம் மற்றும் உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளில் பிரேக்அப் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. காதல் உறவில் இருக்கும் சிலருக்கு போராட்டங்கள் இருக்கலாம். உங்கள் முயற்சிகள் வெற்றி பெற, கூடுதல் முயற்சி தேவைப்படும். இந்த வாரம் எதிர்பாராத பயணம் மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வந்தவர்களுக்கு, சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை வாய்ப்புகளில் கவனம் தேவை, ஏனெனில் வேலையை இழக்க நேரிடும். தொழில் மாற்றம் அல்லது இடமாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்பாக இருக்கும். நாள்பட்ட நோய்கள் மற்றும் கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பொழுதுபோக்கு பயணங்கள் மகிழ்ச்சியை அளிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இரண்டாம் திருமணம் செய்ய முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். இந்த வாரம் நீங்கள் முருகனையும், மகாலட்சுமியையும் வழிபடுவது சிறந்தது.

Updated On 23 Sept 2025 12:09 AM IST
ராணி

ராணி

Next Story