✕
2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் பேச்சுத்திறன் மற்றும் குடும்பநிலை நன்றாக இருக்கும். குடும்பத்தினர் யாரேனும் வாகனம், எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவார்கள். உங்களிடம் நிறைய நபர்கள் ஆலோசனை கேட்பார்கள். அவர்களுக்கு உதவுவதால் கடினமான நாட்களில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தில் 1 மற்றும் 2 ஆம் தேதி சற்று கடினமாக இருக்கும். அந்நாட்களை பொறுமையோடு அமைதியாக கையாண்டால் மாதம் முழுவதுமே நன்மைகள் ஏற்படும். வருமானம் உயர்வதற்கு குரு மற்றும் செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றவும். பக்தியில் முழு ஈடுபாடு இருக்காது. இருந்தாலும் நீங்கள் பின்பற்றும் வழிபாடுகளை தவறாது கடைப்பிடியுங்கள்.

ராணி
Next Story