2024 ஜனவரி 23 முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் காதல் திருமணத்தில் முடியும். நீண்ட காலம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வீட்டில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும் அல்லது ஏதாவது மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ட்ரேடிங் மற்றும் ஆன்லைன் தொழிலில் இருப்பவர்கள் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். திருமண பந்தம் நன்றாக உள்ளது. தொழில் சிறப்பாக உள்ளது. உங்களுடன் பணியாற்றுபவர்கள் கை கொடுப்பார்கள். தேவை இருந்தால் பயணம் செய்யலாம். கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை ஏற்படும். ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர வேண்டாம். சிவன் மற்றும் பைரவர் வழிபாடு ஏற்றத்தை தரும்.
