2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
யாரையும் நம்பாமல் இருக்க முடியாது, அதே நேரம் நம்பவும் கூடாது. தேவையில்லாமல் கடன் கொடுக்க வேண்டாம். கொடுத்தால் வராது. அப்பா மற்றும் உங்கள் உடல் நலனில் கவனம் வேண்டும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தால் இந்த வாரத்தில் செய்யலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வ அனுகூலம் அவசியம். பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. முன்னோர்களின் சொத்துக்கள் வந்து சேரும். கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு உண்டு. பென்ஷன், பி.எஃப், அரியர்ஸ், இன்சூரன்ஸ் போன்ற பணங்கள் வராமல் இருந்தால் வரும். புதிய முயற்சிகள் வேண்டாம். நெருங்கிய உறவினர்களை பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். வீடு, இடம் மாற வேண்டாம். நிதானமாக இருப்பது நல்லது. தேவை இல்லாமல் கடன் வாங்க வேண்டாம். உங்களின் குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபடுவதுடன், சிவ வழிபாட்டை அதிகப்படுத்துவது நல்லது.
