2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நீங்கள் நினைப்பது நடக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் முயற்சிக்கலாம். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். எது எப்படியிருந்தாலும் உங்கள் கௌரவம், அந்தஸ்து கூடும். அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பெரிய அளவில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் நற்பலன்களாக அமையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு பெயர், புகழ் கிடைக்கும். அரசியல் துறைகளில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். விளையாட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு விருதுகள் மட்டுமின்றி அரசின் அங்கீகாரமும் கிடைக்கும். இந்த வாரம் தெய்வ அனுகூலம் இருப்பதால் எதிர்பாராத தெய்வம் மற்றும் ஆலய தரிசனம் ஏற்படும். பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்காக செலவு செய்வீர்கள். குழந்தை பாக்கியம், குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், அவர்களால் நன்மைகள் உண்டாகும். விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு நல்லதொரு ஏற்றத்தை தரும்.
