2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் மற்றும் தெய்வம் விலகி நிற்கும் காலம் என இரண்டும் ஏற்படும். அதனால் நாள்தோறும் தெய்வ தரிசனம் செய்வது நல்லது. பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உறவுகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரிடையாக தொடர்பு கொள்ளுங்கள். விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். உற்பத்தி துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு தகுந்த லாபம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சுமாராக உள்ளதால் பெரிய அளவில் புகழ் கிடைக்காது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் ஏற்படும். தொண்டர்களுடைய ஆதரவு கிடைக்கும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. உடன் பணிபுரிபவர்களால் நற்பலன்கள் உண்டு. வேலையில் டென்ஷன் இருக்கும். முருகன் மற்றும் சிவன் வழிபாடு நன்மையை தரும்.
