2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். உயர் கல்வியை தொடர விரும்பினால் தொடங்கலாம். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வேறு அலுவலகம் மாற நினைத்தால் மாறலாம். உங்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மைகள் ஏற்படும். நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியாகும். நீங்கள் செய்யும் சிறு மற்றும் சுய தொழில், தெருவோர கடை என எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமாக இருக்கும். இடம், வீடு, வாகனம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் தானாக அமையும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல், உற்பத்தி சிறப்பாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் இருந்தாலும், அதற்கேற்ற செலவினங்களும் இருக்கும். இந்த வாரம் எதிலும் முதலீடுகள் செய்ய வேண்டாம். எதிர்பாராத சுற்றுலா மற்றும் வெளியூர் பயணம் செய்வீர்கள். வேலையை பொறுத்தவரை எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். இந்த வாரம் முழுவதும் முருகப்பெருமான் மற்றும் சிவன் தலத்தில் இருக்கக்கூடிய அம்பாள் வழிபாடு முன்னேற்றத்தை தரும்.
