2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நல்லதொரு தெய்வ அனுகூலம் கிடைக்கும். உங்களது கௌரவம், அந்தஸ்து கூடும். சொந்தமாக கம்பெனி அல்லது இண்டஸ்ட்ரியல் நிறுவனம் தொடங்க நினைத்தால் அதற்கான வாய்ப்புகள் இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஆரம்பத்தில் தடை இருந்தாலும், இறுதி வெற்றி உங்களுக்குத்தான். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இடம், வீடு, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 7-ஆம் தேதிக்கு பிறகு அதற்கான வாய்ப்பு உள்ளது. அம்மாவால் ஆக வேண்டிய காரியங்கள் நடந்தேறும். ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். வேலையில் கவனம் செலுத்துங்கள். உடன் பணியாற்றுபவர்களால் சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியை தரும். ஷேர் மார்க்கெட், ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் 7-ஆம் தேதிக்கு பிறகு செய்யுங்கள். ஓரளவு முன்னேற்றம் இருக்கும். குழந்தை பாக்கியம் அல்லது குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். முருகன் மற்றும் விநாயகரை வழிபட்டால் ஏற்றம் ஏற்படும்.
