2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஏதோவொரு வகையில் உங்கள் கௌரவம், புகழ், அந்தஸ்து கூடும். நினைத்துப் பார்க்க முடியாத காரியங்கள் நடைபெறும். தெய்வீக ஸ்தானத்தில் உங்களது கிரகங்கள் இருப்பதால் அப்பாவால் ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும். உயர் கல்வியை தொடரலாம். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்புள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி துறையில் இருப்பவர்களுக்கு வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். உங்களது எண்ணங்கள், சிந்தனைகள் வித்தியாசமாக இருக்கும். அதே நேரம் அவை செயலாக்கம் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மைகள் உண்டாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை அதற்கு தகுந்த லாபம் இருக்கிறது. காதலில் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். அதனால் காதல் முறிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் இரண்டுமே நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத தெய்வம் மற்றும் ஆலய தரிசனம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களை பிரிய வாய்ப்புள்ளது. உறவினர்கள் விஷயத்தில் கவனம் தேவை. சனி பகவான் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
