2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களது கௌரவம், புகழ், அந்தஸ்து கூடும். தொழில் முனைவோராக வர நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் இருக்கிறது. பாஸ்போர்ட், விசா வராமல் இருந்தால் வரும். உயர்கல்வியை பொறுத்தவரை பரவாயில்லை. இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்கள் அதற்காக முயற்சிக்கலாம். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒன்றிற்கு மேற்பட்ட தொழில் செய்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. திருமணம் தள்ளிபோனவர்களுக்கு திருமணம் கைகூடும். மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமானதாகவும் இருக்கும். எதிர்பார்த்த செய்திகள், எதிர்பாராத செய்திகள் இவை அனைத்தும் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தரும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். கல்வி சிறப்பாக உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், கிரிப்டோ கரன்சி போன்ற எதில் முதலீடு செய்தாலும் யோசித்து செய்யுங்கள். அதே நேரம், டிஜிட்டல் கரன்சி, கோல்டு பாண்ட், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யலாம். இஷ்ட தெய்வத்தை வணங்குவதோடு, விநாயகரையும் சேர்த்து வழிபடுவது நல்லது.

Updated On 9 April 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story