2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு காப்பாற்றப்படும். இந்த வாரம் நண்பர்களால் குறிப்பாக ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. அதிலும் அந்நிய மொழி பேசும் நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. உயர்கல்வி நன்றாக இருக்கிறது. வெளிநாடு வெளிமாநிலங்கள் சென்று படிக்க விரும்புபவர்கள் தாராளமாக முயற்சி செய்யுங்கள். வேறு நிறுவனம் மாற நினைப்பவர்களும் அதற்கான முயற்சிகளை செய்யலாம். பொருளாதார நிலைகள் நன்றாக இருக்கிறது. கையில் பணம், தனம் மிஞ்சும். உங்கள் முயற்சிகளில் ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும், இறுதியான வெற்றி உங்களுக்குத்தான். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் பெரிய அளவில் இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விலை உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம், பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, அனைத்தும் உண்டு. உங்கள் அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், பாராட்டுகள் இருக்கிறது. வேலை நிமித்தமான இடமாற்றம் உண்டு. சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் நன்றாக உள்ளது. அப்பாவால் நன்மை உண்டு. இந்த வாரம் முழுவதும் விநாயகர், துர்க்கை இருவரையும் வழிபாடு செய்யுங்கள் ஏற்றம் பெறுவீர்கள்.
