2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். பெரியளவில் தொழில் தொடங்க வேண்டும், ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும், தொழில் முனைவோராக வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இந்த வாரம் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குழந்தை பாக்கியம் உண்டு. ஆசைகள், அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள், எதிர்பாராத செய்திகள் அத்தனையும் உங்களுக்கு சாதகமாக அமையும். விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில் நன்றாக உள்ளது. நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், பொழுதுபோக்கு என்பது பெரிய அளவில் இருக்கும். இயற்கையாகவே தெய்வ அனுகூலம் கிடைப்பதால் கிடைக்கின்ற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, வருமானங்கள் அனைத்தும் உண்டு. ஷேர், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் உங்களது இஷ்ட தெய்வம் மற்றும் விநாயகரை வழிபாடு செய்தால் இன்னும் ஏற்றம் பெறலாம்.
