2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

புதிதாக இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதற்கேற்ற பொருளாதாரமும் கண்டிப்பாக இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்தால் கிடைக்கும். மணி ரொட்டேஷன் நன்றாக இருக்கிறது. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். உங்களை நீங்களே பெரிய அளவில் புதுப்பித்து கொள்வீர்கள். உங்களின் சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு வகையில் உதவி செய்வார்கள். யாரை தொடர்பு கொள்ள நினைக்கிறீர்களோ அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். உறவுகளால் மகிழ்ச்சி, நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். நீங்க நாட்களாக வீடு மாற நினைப்பவர்களுக்கு, அதற்கான மாற்றங்கள் உண்டு. விற்காமல் இருக்கும் சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம், பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் நல்லதொரு முன்னேற்றங்கள் இருக்கின்றன. உயர்கல்வியை பொறுத்தவரை பரவாயில்லை. வேலையை பொறுத்தவரை ஏற்றத்தை அடைவீர்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மையும், ஆண் நண்பர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். இந்த வாரம் பிரம்மாவுடைய வழிபாடு, குறிப்பாக மும்மூர்த்திகளில் சிவ வழிபாடு பிரதானமாக செய்யுங்கள்.

Updated On 6 May 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story