2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட நாட்களாக வீடு, இடம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வி சிறப்பாக உள்ளது. புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. தேவை இருந்தால் தவிர பயணம் வேண்டாம். அந்த பயணத்தால் தேவையற்ற செலவினங்கள் உள்ளன. முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். அந்த முயற்சிகளால் எந்த பயனும் இல்லை. உறவுகள் விஷயத்தில் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களை விட்டு பிரிந்து இருக்க கூடிய காலம். அம்மா இருந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. ஆனால், வருமானம் இல்லை. அரசியல் வாழ்க்கை பிரமாதமாக இல்லை. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தால் கிடைக்க வாய்ப்புள்ளது. சொந்த தொழில் லாபகரமாக இல்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் உங்களை விட்டு பிரிந்து இருப்பார். கணவன் - மனைவி உறவு சுமாராகவே இருக்கும். இருவரில் யாராவது ஒருவருக்கு விரயம், வைத்தியச் செலவுகள் உண்டு. இந்த வாரம் சிவ வழிபாடு, விநாயகர் தரிசனம் பிரதானமாக செய்வது நல்லது.

Updated On 14 May 2024 10:29 AM IST
ராணி

ராணி

Next Story