2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரம் நன்றாக இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். அதற்கான வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில் கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு பிரிவு, பிரச்சினை, வைத்தியச் செலவுகள் போன்றவை இருக்கிறது. சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டுமே இந்த வாரம் சுமார். வெளிநாடு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வெளிமாநிலங்கள், வெளியூர், வெளிநாட்டில் முதலீடு செய்வதாக இருந்தாலும் செய்யுங்கள். ஆராய்ச்சி தொடர்பாக படிப்பவர்களுக்கு சூழல்கள் நன்றாகவே உள்ளது. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன் ஷிப் ஆகியற்றிற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உயர்கல்வி மற்றும் அப்பா - அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. அரசியல் வாழ்க்கையில் கவனம். எதிரிகள் உங்களை ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. வருமானங்கள் சுமார். வேலையை பொறுத்தவரை எந்த துறையில் இருந்தாலும் ஒரு திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் விவாதிக்காதீர்கள். உங்களின் நண்பர்கள் ஏதோவொரு வகையில் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத நட்பு வட்டாரம் உருவாகும். பைரவரை வழிபடுவது இந்த வாரம் நன்மையை அளிக்கும்.

Updated On 28 May 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story