2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத செலவினங்கள் இருக்கின்றன. பி.எச்.டி, ஆராய்ச்சி தொடர்பாக படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்க்கு விண்ணப்பித்திருந்தால் அவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் வருமானங்கள் அதிகமாக இருப்பதற்கு ஏற்றார் போலவே செலவினங்களும் இருக்கின்றன. குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்காகவும், துணைவியாருக்காகவும் செலவு செய்வீர்கள். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. நீண்ட நாட்களாக விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம் மாறுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. முற்றிலும் புதிய சூழ்நிலைகள், புதிய இடங்களில் வாழ்க்கை நடத்துவதற்கான காலகட்டம். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் தேவையில்லாத செலவினங்கள் இருக்கின்றன. கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். ஏனென்றால் உங்கள் வேலையில் மன அழுத்தம், டென்ஷன் ஆகியவை இந்த வாரத்தில் இருக்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாக இருக்கும். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இந்த வாரம் முழுவதும் பெருமாள் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 4 Jun 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story