2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இதுவரை தேவையில்லாத நஷ்டம், விரயம், வைத்தியச் செலவுகளை சந்தித்துக் கொண்டிருந்த நீங்கள் அதில் இருந்து விடுபட்டு நல்ல நிலைக்கு வருவதற்கான வாய்ப்பு கிரக ரீதியாக உள்ளது. நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கி கையில் பணம், தனம், பொருள் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை, நெருங்கிய உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். நீண்ட நாட்களாக சொத்துக்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய ஏற்றம், முன்னேற்றத்தை கொடுக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி பிரமாதமாக இருக்கிறது. வருமானங்களும் நன்றாக இருக்கிறது. வேலை நன்றாக இருக்கிறது. ஆனால், நீங்கள்தான் திருப்தியில்லாத மனநிலையில் இருப்பீர்கள். அதனால் செய்யும் வேலையை திருப்தியோடு, சந்தோஷமாக செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.
