2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

குழந்தைகளுக்காக செலவு செய்யுங்கள் அல்லது ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். முதலீடு செய்யும் அளவுக்கு கையில் பணம் இல்லை என்றால் யாருக்காவது உதவி செய்யுங்கள். ஏனென்றால் தேவையில்லாத செலவினங்கள் உங்களுக்கு குறையும். கல்வி நன்றாக உள்ளது. இடம், வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். உங்களின் முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றியடையும். உங்களை நீங்களே புதுப்பித்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை நன்றாக உள்ளது. தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. வேலையில் நல்ல முன்னேற்றங்கள் உண்டு. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் உங்களை விட்டு பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நட்பை தொடருங்கள். நெருங்கிய நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மூத்த சகோதர - சகோதரிகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கை ஏற்றம், முன்னேற்றம் மிகுந்ததாக இருக்கும். செய்யும் வேலையை திருப்தியோடு செய்தால் மட்டுமே உங்கள் கெரியர் நன்றாக இருக்கும். இந்த வாரம் முழுவதுமே விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பைரவரை வழிபாடு செய்யுங்கள் நல்லதொரு முன்னேற்றம் அமையும்.

Updated On 25 Jun 2024 9:02 AM IST
ராணி

ராணி

Next Story