✕
2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
பூர்விகம் சார்ந்த இறை வழிபாட்டில் அதிக நாட்டம் இருக்கும். வாகனம் தொலைதல் அல்லது வீட்டில் பிரச்சினை அல்லது பழைய ஆவணங்கள் தொலைதல் போன்ற பிரச்சினைகள் வரலாம். தாயார் வகையில் குழப்பங்கள் இருக்கும். சுகங்கள் சார்ந்த விஷயங்களில் பொறுப்புடன் செயல்படுங்கள். 31, 1 தேதிகளில் பொருள் விரயங்கள் மற்றும் தேவையில்லாத செலவுகள் வரலாம். 2, 3 தேதிகளில் மனக்குழப்பங்கள் இருக்கும். தூர தேச பிரயாணங்களை தவிர்த்துவிடுங்கள். சிறுசிறு முடிவுகளில் பொறுமை தேவை. 4, 5, 6 தேதிகளில் குடும்பத்துக்குள் மகிழ்ச்சி இருக்கும். பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ராணி
Next Story