மாதம் முழுவதும் குரு ஒன்பதாமிடத்திலிருந்து ராசியைப் பார்க்கிறார். பெரும்பாலான நாட்கள் சுக்ரனும் செவ்வாயின் இணைவினால் மங்கள யோகத்தில் இருக்கிறார். ராசியும் ராசிநாதனும் சுபத்துவமாக இருக்கும் இந்த மாதம் முழுவதும் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்படும், எதிர்ப்புகள் மறையும். வேலை, தொழில் அமைப்புகளில் முன்னேற்றம் உண்டாகும். ஊடகம், திரைத்துறையில் வாய்ப்புகளை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் அனைவருக்கும் நஷ்டங்கள் விலகும். ஆரோக்கிய குறைவு, கடன் தொல்லை தீரும். நிலைத்த வருமானம் உண்டாகும். கீழை நாடுகளிலிருந்து உதவிகள் கிடைக்கும்.

Updated On 12 July 2023 9:55 AM GMT
ராணி

ராணி

Next Story