2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்

அதீத புத்திக்கூர்மையும், தெளிவான சிந்தனையும் இருக்கும். 26ஆம் தேதியில் நற்பலனும், 27, 28 தேதிகளில் நண்பர்கள் மற்றும் மனைவியுடன் சற்று சாதகமான பலனும் கிடைக்கும். 29, 30 தேதிகளில் பிரயாணம் மற்றும் புதிய முடிவுகளில் கவனம் தேவை. 1, 2 தேதிகளில் குல தெய்வ வழிபாடு, இறை வழிபாட்டால் மன அமைதி கிடைக்கும். தந்தை விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் தந்தையின் சொத்துகள் அனைத்தும் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் கவனமாக செயல்படவேண்டும். வெண்மை நிறத்தை பயன்படுத்தினால் முயற்சிகளில் அதீத வெற்றி கிடைக்கும்.

Updated On 26 Sep 2023 5:17 AM GMT
ராணி

ராணி

Next Story