2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் திருப்தியற்ற மனநிலையில் இருப்பார். மணவாழ்க்கை ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. அந்த காதல் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும். உங்கள் முயற்சிகள் ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும், இறுதியில் வெற்றி பெறும். நீங்கள் நினைப்பதை செயல்படுத்துவதற்கு கடுமையாக போராடுவீர்கள். இறுதியாக வெற்றியும் பெறுவீர்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் வேலைகள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். இளைய சகோதர - சகோதரிகளுக்காகவும், நெருங்கிய உறவுகளுக்காகவும் நிறைய செலவு செய்வீர்கள். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை இருக்கிறது. ஆனால், வருமானம் இல்லை. எல்லாவிதமான கல்வியும் சிறப்பாக உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சின்ன சின்ன தடைகள் உள்ளன. அரசியல் வாழ்க்கை சுமாராக இருக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள், கேடயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நல்ல தொழில் முனைவோராக வர நினைப்பவர்கள் உங்கள் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருக்கும் பட்சத்தில் முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். இந்த வாரம் முழுவதும், துர்கையையும், காளியையும் வழிபாடு செய்யுங்கள். நல்லதொரு ஏற்றம் அமையும்.