2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒரு பக்கம் தெய்வத்தின் அருள் கிடைக்கும். இன்னொரு பக்கம் சற்று விலகிச் செல்லக்கூடிய காலமாகவும் இருக்கிறது. இதனால், உங்களுக்கு ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் நிலவும். நீங்கள் யாருக்காவது பணம் கடன் கொடுத்தால், அது திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்படலாம். தொழிலை பொறுத்தவரை, எதிர்பாராத லாபமும், வருமானமும் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் இருவரும் லாபமும், நன்மையும் பெறுவீர்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை உங்கள் கையில் பணம் இருக்கும். ஆனால், அதற்கு ஏற்ற செலவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தேவை இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ளுங்கள். இல்லையென்றால் முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். எது செய்வதாக இருந்தாலும் ஒன்றுக்கு, இரண்டு முறை நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. கல்வி நிலை நன்றாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், வருமானமும், லாபமும் இருக்கும். இந்த வாரத்தில் சிவபெருமானையும், அம்பாளையும் தரிசனம் செய்யுங்கள்.
