2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் அந்தஸ்து, புகழ், கௌரவம் கூடும். தொழில் அல்லது வியாபாரத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல நினைப்பவர்களுக்கு வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் ஏராளமாக கிடைக்கும். ஏழாம் இடத்தில் ராகு குருவின் நட்சத்திரத்தில் இருப்பதால், இதுவரை திருமணம் தள்ளிப்போனவர்களுக்கும் அல்லது திருமணம் வேண்டாம் என்று நினைத்தவர்களுக்கும் இந்த வாரம் கண்டிப்பாக திருமணம் கைகூடும். வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம், வருமானம், சம்பாத்தியம் ஆகியவை கிடைக்கும். உங்கள் மண வாழ்க்கை இந்த வாரம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த வாரம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யூக வணிகங்கள் லாபம் தருவது போல் தோன்றினாலும், கவனம் தேவை. கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புகழ் அந்தஸ்து உண்டு. வருமானம் சாதாரணமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு அந்தஸ்து கூடும், புகழ் பெருகும், எதிரிகளை வெல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. இந்த வாரத்தில் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டவர்கள் தாராளமாக செய்யலாம், இது இந்த மாதத்தில் மிகவும் முக்கியம். கணவன் மனைவி உறவில் சண்டை இருந்தாலும், தொழிலை பொறுத்தவரை நல்ல லாபங்களும், வருமானங்களும் கிடைக்கும். இந்த வாரம் சனி பகவானையும், குறிப்பாக பைரவரையும் வழிபடுவது நல்லது.
