2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம். தொழிலில் நல்ல லாபமும், வருமானமும் உண்டு. நீண்ட நாட்களாக குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறாமல் இருந்தால், அவை இந்த வாரம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. குடும்பத்தில் புதிய வரவு வரலாம். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் லாபம் வருவதுபோல் தோன்றினாலும், பெரிய லாபம் இருக்காது. இரண்டாம் திருமணம் முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு. உயர் கல்வி பரவாயில்லை. கையில் பணம், பொருள் இருக்கும். தொழில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து குறைவாக இருக்கலாம். வருமானம் சுமாராக இருக்கும். யூக வணிகங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். வேலைவாய்ப்பில் கவனம் தேவை. வேலைப்பளுவும், அழுத்தமும் அதிகமாக இருக்கும். வேலையை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வரலாம். பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்கவும். சக ஊழியர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். ஆஞ்சநேயர் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபடுவது நல்லது.

Updated On 10 Jun 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story