2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்களின் ராசியில் செவ்வாய், கேது மற்றும் லாபஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், உங்கள் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் ஏதோ ஒரு வகையில் பூர்த்தியாகும். வருமானங்கள் அதிகமாக இருந்தாலும், செலவுகளும் அதிகமாகவே இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நிச்சயமாக வெற்றியடையும். நீங்கள் நம்பியவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க யாராவது இந்த வாரம் முன்வருவார்கள். சிறுதொழில், சுயதொழில் மற்றும் வீட்டிலிருந்து செய்யும் தொழில்கள் நன்றாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் சனி பகவான் எட்டாம் இடத்தில் இருப்பதால் நிறைய போராட்டங்கள் இருக்கும். எதிர்பாராத விடுப்பு எடுக்க வேண்டிய நிலை வரலாம். உங்கள் உழைப்பு அடுத்தவர்களுக்கு லாபத்தை அளிக்கும். கல்வி பரவாயில்லை. தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும், அவர்களுக்கு நற்பலன்கள் அமையும். பங்குச்சந்தை, லாட்டரி, வர்த்தகம் போன்ற ஊக வணிகங்களில் மிதமாக முதலீடு செய்யலாம், நல்ல வருமானம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து உண்டு. விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். நல்ல நட்பு வட்டம் உருவாகும். மூத்த சகோதரர்/சகோதரியால் நன்மைகள், பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும் வாய்ப்பு ஆகியவை உண்டு. பைரவர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடவும்.
